Monday, May 23, 2011

விண்டோஸில் பாஸ்வர்ட் மறந்து போனால்..





விண்டோஸ் எக்ஸ்பி இயங்கு தளத்தில் பயனர் கணக்கை (user account) உருவாக்கி அதனை எவரும் அணுகா வண்ணம் பாஸ்வர்ட் மூலம் பாதுகாப்பளிக்கவும் முடியும் என்பது நீங்கள் அறிந்த விடயமே. அப்படி நீங்கள் உருவாக்கும் பயனர் கணக்குக்குரிய பாஸ்வர்ட் ஒருவேளை மறந்து போனால் விண்டோஸில் டிபோல்டாக உருவாக்கப்படும் எட்மினிஸ்ட் ரேட்டர் (administrator) கணக்கு மூலம் லொக் ஓன் செய்து அதனை நீக்க முடியும்இதனைப் பற்றி ஏற்கனவே ஐடி வலம் பகுதியிலும் சொல்லியிருக்கிறேன்.

இந்த அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக்குப் பாஸ்வர்ட் இட்டுக் கொள்வோரும் உண்டு. இப்போது அந்த அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக் குரிய பாஸ்வர்டும் மற்ந்து போனால் என்ன செய்வது? அதற்கும் ஒரு தீர்விருக்கிறது. எனினும் இந்த வழிமுறை ஓரளவு சிக்கலானது. விண்டோஸைப் புதிதாக நிறுவும் முறையை அறிந்திருப்போருக்கு இது இலகுவான விடயமே.

முதலில் கணினியை இயக்கி சிடியிலிருந்து பூட் ஆகுமாறு பயோஸ் (BIOS) செட்டப்பில் மாற்றி விடுங்கள். கணினியை மறுபடி இயக்கி விண்டோஸ் எக்ஸ்பீ சிடியை ட்ரைவிலிட Press any key to boot from CD எனும் செய்தி திரையில் தோன்றும். அப்போது ஒரு விசையை அழுத்த சிடியிலிருந்து கணினி பூட் ஆக ஆரம்பிக்கும். இது விண்டோஸை நிறுவும் செயற்பாட்டில் முதற்படியாகும்.

இந்த செயற்பாட்டில் கணினியைப் பரிசோதித்து பைல்கள் லோட் செய்யப்பட்டதும் Licensing Agreement திரை தோன்றும். அப்போது F8 விசையை அழுத்தியதும் வரும் திரையில் புதிதாக விண்டோஸை நிறுவுவதா அல்லது ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளதை சரி செய்வதா (Repair) என வினவும். அப்போது கீபோர்டில் R கீயை அழுத்தி ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள விண்டோஸை சரி செய்வதற்கான விருப்பை தெரிவு செய்யவும்.
அடுத்து கணினி மறுபடி இயங்க ஆரம்பித்து (restart) ஒரு சில நிமிடங்களில் திரையின் இடது புறத்தில் Installing Devices எனும் செயற்பாடு நடைபெறக் காணலாம். இந்த இடத்தில்தான் நீங்கள் செயற்பட வேண்டியுள்ளது. இங்கு கீபோர்டில் SHIFT + F10 விசைகளை ஒரே நேரத்தில் அழுத்துங்கள். அப்போது திரையில் கமாண்ட் விண்டோ தோன்றும். கமாண்ட் ப்ரொம்டில் NUSRMGR.CPL என டைப் செய்து எண்டர் கீயை அழுத்த கண்ட்ரோல் பேனலிலுள்ள User Accounts விண்டோ திறக்கக் காணலாம். இங்கு நீங்கள் விரும்பும் பயனர் கணக்குக்குரிய பாஸ்வர்டை மாற்றவோ நீக்கவோ முடியும்.,
ஒரு யூசர் கணக்கில் நுளையும்போது அதாவது லொக்-ஓன் செய்யும் போது பாஸ்வர்டை வினவாமல் செய்ய அதே கமாண்ட் ப்ரொம்டில் control userpasswords2 என டைப் செய்து எண்டர் கீயை அழுத்துங்கள். அப்போது படத்தில் உள்ளது போல் ஒரு டயலொக் பொக்ஸ் தோன்றும். அங்கு அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக்குரிய பாஸ்வர்டை மாற்றவோ அல்லது நீக்கவோ (Reset password) ரீசெட் பாஸ்வர்ட் பட்டனில் க்ளிக் செய்து மாற்றிக் கொள்ளலாம்.

மாற்றங்கல் செய்த பின்னர் அந்த டயலொக் பொக்ஸை மூடிவிட்டு விண்டோஸ் ரிபெயாரிங் செயற்பாடு பூர்த்தியாகும் வரை அதனைத் தொடர வேண்டும்.



How to Search Rapidshare.............



Usually you can find all sorts of files on the file storage servers like Rapidshare, Megaupload etc. But the key is you need to know the exact link to download the particular file. Let it be a movie or video or Mp3 or a software pack or a game software, you got to know the link. Because rapidshare kind of file storage service providers, they don’t give the feature to search their files database.

For example you got to know this link to download a hot tamil video song. http://www.megaupload.com/?d=TBIIUP9A

So now is there a way to search these file storage servers? Yes. Here there is a search engine http://www.funfail.com/which does the search on RapidShare, MegaUpload, TurboUpload, SendSpace etc and lists the links for us. Just type in the keyword. That’s it. It does the rest.

As of now you could make big money if you could develop a good search engine to search these kinds of public file storage servers.

How do you search RapidShare using google search engine

If it is a Video file

Avi|mpg|mpeg|wmv|rmvb site:rapidshare.de

If it is a Music file

mp3|ogg|wma site:rapidshare.de

If it is a Program,Application file

zip|rar|exe site:rapidshare.de

If it is eBook file

pdf|rar|zip|doc|lit site:rapidshare.com

Optionally add the word what you are particularly looking for. for example to search keyword bollywood type like this

mp3|ogg|wma site:rapidshare.de bollywood

World Second Richest man`s attitude...



There was a one hour interview on CNBC with Warren Buffet, the second
richest man who has donated $31 billion (85% of his fortune) to charity.

Here are some very interesting aspects of his life:

1) He bought his first share at age 11 and he now regrets that he started too late!

2) He bought a small farm at age 14 with savings from delivering newspapers.

3) He still lives in the same small 3 bedroom house in mid-town Omaha, that he bought after he got married 50 years ago. He says that he has everything he needs in that house. His house does not have a wall or a fence.

4) He drives his own car everywhere and does not have a driver or security people around him.

5) He never travels by private jet, although he owns the world's largest private jet company.

6) His company, Berkshire Hathaway, owns 63 companies. He writes only one letter each year to the CEOs of these companies, giving them goals for the year. He never holds meetings or calls them on a regular basis.

7) He has given his CEO's only two rules.

Rule number 1: Do not lose any of your share holder's money.

Rule number 2: Do not forget rule number 1.

8) He does not socialize with the high society crowd. His past time after he gets home is to make himself some pop corn and watch television.

9) Bill Gates, the world's richest man met him for the first time only 5 years ago. Bill Gates did not think he had anything in common with Warren Buffet. So he had scheduled his meeting only for half hour. But when Gates met him, the meeting lasted for ten hours and Bill Gates became a devotee of Warren Buffet.

10) Warren Buffet does not carry a cell phone, nor has a computer on his desk.

11) His advice to young people: Stay away from credit cards and invest in yourself.

Sunday, May 22, 2011

யூடியூப் காணொளிகளை தரவிறக்கம் செய்ய இலகுவான வழி ............



கூகுளின் யூடியூப் என்பது மிகப்பிரபலம் பெற்ற இணையத்தளமாகும். இதில் பல இலட்சக்கணக்கான காணொளிகள் தரவேற்றப்பட்டுள்ளன. இவற்றை நாம் இலவசமாக கண்டுகளிக்கமுடியும்.



இதில் இல்லாத காணொளிகள் இல்லை என்று சொல்லுமளவிற்கு பழையவை முதல் புதியவை வரை அனைத்தும் உள்ளன. இவற்றில் சிலவற்றை எமக்கு தரவிறக்கம் செய்து கொள்ள ஆர்வமிருக்கும். இவற்றிற்காக நாம் சில மென்பொருட்களை உபயோகப்படுத்துவது வழக்கம்.

அவ்வாறு நாம் தரவிறக்கும் காணொளிகள் FLV என்ற வடிவத்திலேயே கிடைக்கும். இவற்றை பின்னர் நாம் நமக்கு தேவையான வடிவத்திற்கு மாற்றிக் கொள்வது வழக்கம்.

ஆனால் வேறு எந்த மென்பொருட்களின் துணையுமின்றி மிக இலகுவாக Mp3, Mp4, FLV வடிவத்தில் யூடியுப் வீடியோவின் கீழ் தோன்றும் பட்டனின் உதவியுடனேயே தரவிறக்கம் செய்யமுடியும்.





கீழுள்ள இணைப்புகளின் ஊடாக அதனை தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

பயர்பொக்ஸ் பாவனையாளர்கள்

https://addons.mozilla.org/en-us/firefox/addon/easy-youtube-video-downl-10137/

குரோம் பாவனையாளர்கள்

http://www.chromeextensions.org/other/easy-youtube-video-downloader/ __...............


Friday, May 20, 2011

உங்கள் கம்ப்யூட்டரில் “NTLDR missing, press ctrl + alt + delete to Restart” என்று வந்தால்....




உங்கள் கம்ப்யூட்டரை Start செய்யும் போது "NTLDR missing, press ctrl+alt+delete to Restart” என்று வந்தால் என்ன செய்வீர்கள்?

NTLDR என்பது New Technology loader என்பதாகும். கம்ப்யூட்டர் Start ஆகும்போது BIOS ஆனது Harddrive ன் Active Partition MBR க்கான முதலாவது Sector ஜ Read செய்யும் பின்புதான் மற்ற Os பகுதிகள் Loading ஆகும். MBR ஆனது NTLDR ற்கு point செய்யப்பட்டுள்ளது. ஆகவேதான் NTLDR , Ntdetect.com போன்ற பூட்டிங் பைல்களில் ஏதாவது பிழை ஏற்படும் போதுதான் மேற்கூறிய Error message வருகிறது.

இப்படி பிரச்சனை வரும்போது விண்டோஸை புதிதாக நிறுவாதீர்கள் ஏனெனில் இப்படிச் செய்தால் நீங்கள் "My document" ல் சேர்த்து வைத்திருக்கும் அனைத்து பைல்களும் அளிந்துவிடும். இந்தப் பிரச்சனைக்கு சிறந்த வளியொன்று உள்ளது.

•முதலில் கம்ப்யூட்டரை "Restart" செய்யுங்கள்
•பின்பு கம்ப்யூட்டரை 'விண்டோஸ் CD' மூலம் பூட்டிங் செய்யுங்கள்
•சிறிது நேரத்தில் Taskbar , Enter=Continue , R=Rapier , F3=Quit போன்றவற்றைக்
கொண்ட திரை தோன்றும்
•அப்போது 'R' என்பதை அளுத்துங்கள் பின்பு
•1 Windows என்பதும் அதற்குக்கீழ் Which windows installation would you like to log onto (to cancel, press Enter)? காணப்படும் இதில் 1 ஜ அளுத்துங்கள்.
•பின்பு உங்கள் “Administrator” பாஸ்வேடைக் கொடுத்து “Log on” செய்யுங்கள்.
•இனி C:\Windows> என்பதில் கீழுள்ள Code ஜ Type செய்யுங்கள்

Copy E:\I386\NTLDR C:\
Copy E:\I386\NTDETECT.COM C:\

என்று Type செய்து Enter செய்தால் சரி.

இனி Exit எனறு Type செய்தால் இதை விட்டு வெளியேறலாம். அல்லது 'Restart' செய்யுங்கள். இப்போது உங்கள் பிரச்சனை சரியாகிவிடும்.

குறிப்பு : இங்கு C என்பது “CD Rom Drive” ஆக கொடுத்துள்ளேன். நீங்கள் உங்கள் கம்யூட்டரில் CD Rom Drive ஆக எது உள்ளதோ அதைக் கொடுத்தால் சரி.

குறிப்பு : இங்கு E என்பது எனது கம்ப்யூட்டரில் விண்டோஸ் install செய்துள்ள Drive ஆக கொடுத்துள்ளேன். நீங்கள் உங்கள் கம்யூட்டரில் எந்த Drive ல் விண்டோஸ் install செய்துள்ளீர்களோ அதைக் கொடுத்தால் சரி.

இந்த இரண்டையும் சரியாகக் கொடுப்பது மிகவும் அவசியம்................

விரும்பிய Application களை Shortcut keys மூலம் உடனடியாக திறப்பது எப்படி?




Application களை Shortcut keys மூலம் திறப்பது மிகவும் இலகுவானதுடன் நேரம் மிச்சமாகும்.
இங்கே Application ஒன்றுக்கு எவ்வாறு இலகுவாக Shortcut key ஜ Assign செய்வது என்று பார்க்கலாம்.

முதலில் நீங்கள் Shortcut key ஜ Assign செய்யப்போகும் உங்களுக்குத் தேவையான ஏதாவது ஒரு Application ஜ பின்வரும் படிமுறை மூலம் தெரிவு செய்யுங்கள்.
நான் இங்கே உதாரணமாக winamp என்னும் Player ஒன்றுக்கு Shortcut key ஜ Assign செய்கிறேன். இதைப்போன்று நீங்கள் உங்களுக்கு தேவையான Application Shortcut key ஜ Assign செய்து கொள்ளலாம்.
1. Start -> All Programs -> winamp 
2. அடுத்து அந்த Application ல் வைத்து  Right click செய்யுங்கள்.இப்போது கீளுள்ளது போன்று
    Dialog box ஒன்று தோன்றும்

நீல வட்டத்திலுள்ள பெட்டியில் தற்போது எந்த Shortcut key ம் Assign செய்யப்படவில்லை என்பதால் None என்று காணப் படுகிறது.

நீல வட்டத்தால் காட்டப்பட்டுள்ள Shortcut key என்பதற்கு எதிரே உள்ள பெட்டியில் Cursor ஜ வைத்துவிட்டு Key board இலுள்ள ஏதாவது ஒரு Key ஜ அழுத்துங்கள்

நான் இங்கு F12 எனும் Key ஜ Assign செய்கிறேன்.



பின்பு  Apply and Ok Button களை அழுத்தி மூடுங்கள்.
அவ்வளவு தான் இனி நீங்கள் Shortcut key யாக Assign செய்த key களை Key board அழுத்துங்கள் அந்த Application உடனடியாகவே திறந்துகொள்ளும்...

Wednesday, May 18, 2011

கூகுள் குரோம் உலவியினை கொண்டு Youtube வீடியோவினை தரவிறக்கம் செய்ய

Youtube தளத்தில் இருந்து வீடியோவினை தரவிறக்கம் செய்ய நாம் இதுவரை பல வழிகளை மேற்கொண்டோம் தற்போது Youtube தளத்தில் உள்ள விடியோக்களை கூகுள்குரோம் உலவியினை கொண்டு தரவிறக்கம் செய்வது எவ்வாறு என்று பார்ப்போம். Youtube தளம் என்பது வீடியோவினை நண்பர்களிட்மோ அல்லது இணைய நண்பர்களிடமோ பகிர்ந்து கொள்ளும் தளம் ஆகும். இந்த தளத்தில் உள்ள வீடியோக்களை யார் வேண்டுமானலும் பார்க்கலாம், வேண்டுமானால் தரவிறக்கம் செய்தும் பயன்படுத்தி கொள்ள முடியும். இந்த Youtube தளமானது கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமானது ஆகும். இந்த தளத்தில் உள்ள வீடியோக்களை தரவிறக்கம் செய்ய பலவழிமுறைகள் உள்ளன.

கூகுள்குரோம் உலவியினை கொண்டு  Youtube தளத்தில் இருக்கும் விடியோவினை தரவிறக்கம் செய்ய முதலில் Youtube தளத்தில் டவுண்லோட் பட்டனை சேர்க்க வேண்டும். அதற்கு ஒரு ஸ்கிரிப்டை கூகுள்குரோம் உலவியில் இணைக்க வேண்டும். 

ஸ்கிரிப்டை இணைப்பதற்கான சுட்டி


ஸ்கிரிப்டை இன்ஸ்டால் செய்ய சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று, Install என்ற பொத்தானை அழுத்தவும். பின் ஒரு விண்டோ ஒப்பன் ஆகும், அதிலும் Install என்பதை கிளிக் செய்யவும். தற்போது ஸ்கிரிப்ட் கூகுள் குரோம் உலவியில் இணைக்கப்பட்டுவிட்டது என்ற செய்தி வரும்.


அடுத்து நீங்கள் கூகுள் குரோம் உலவியில் Youtube விடியோவை காணும் போது வீடியோவின் அடிப்பகுதியில் டவுண்லோட் பட்டன் இணைக்கப்பட்டிருப்பதை காண முடியும். இந்த பட்டனை பயன்படுத்தி வீடியோவை டவுண்லோட் செய்து கொள்ள முடியும்.


இந்த வசதியின் மூலமாக Youtube தளத்தில் இருக்கும் வீடியோவை எளிமையாக டவுண்லோட் செய்து கொள்ள முடியும். இந்த டவுண்லோட் ஆப்ஷன் மூலாமாக  பல்வேறு வீடியோ பைல் பார்மெட்டுக்களில் டவுண்லோட் செய்து கொள்ள முடியும்.


இவற்றில் குறிப்பிட்டுள்ள வீடியோ பைல் பார்மெட்டுக்களில் இருந்து வீடியோவை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். இப்படியும் Youtube தளத்தில் உள்ள வீடியோவை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

வீடியோக்களை தரவிறக்கம் செய்ய அருமையான மென்பொருள்

வீடியோக்களை தரவிறக்கம் செய்ய நாம் பெரும்பாலும் நாடுவது Youtube தளம் ஆகும். இந்த தளத்தில் வீடியோக்களை தரவிறக்கம் செய்ய பல வழிகள் உள்ளன. இருப்பினும் இணையத்தில் இருக்கும் வீடியோக்களை தரவிறக்கம் செய்ய முடியாது. ஒரு சில குறிப்பிட்ட தளங்களில் உள்ள வீடியோக்களை மட்டுமே தரவிறக்கம் செய்ய முடியும். நாம் என்னத்தான் முயன்றாலும் ஒருசில தளங்களில் உள்ள வீடியோவை மட்டும் நம்மால் தரவிறக்கம் செய்யவே முடியாது. ஆனால் இவை எல்லாவற்றுக்கும் மேலாக இணையத்தில் கிடைக்கும் வீடியோகள் அனைத்தையும் தரவிறக்கம் செய்ய ஒரு அருமையான மென்பொருள் உள்ளது அதுதான் All Video Downloader. இந்த மென்பொருளின் மூலம் சுமார் 280 தளங்களில் உள்ள வீடியோக்களை தரவிறக்கம் செய்ய முடியும் என அந்த நிறுவனம் கூறியுள்ளது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி நிறுவிக்கொள்ளவும், பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். தோன்றும் விண்டோவில் வீடியோ URL யை உள்ளிட்டு Download என்னும் பொத்தானை அழுத்தவும். பின் வீடியோ டவுண்லோட் ஆக தொடங்கும். இந்த மென்பொருள் சப்போர்ட் செய்யக்கூடிய வீடியோ பைல் பார்மெட்டுகள்.avi, .wmv, .mpeg1, .mpeg2, .mp4, .mov, .flv, iPod™, iPod Touch™, iPad™, iPhone™, Psp™, Ps3 ™, DVD.

கலர் புகைப்படங்களை கருப்புவெள்ளை படங்களாக மாற்ற அருமையான மென்பொருள்

நமக்கு பிடித்த பலவற்றை புகைப்படங்களாக சேமித்து வைத்திருப்போம். சில படங்களை பார்க்கும் போது கலர் புகைப்படத்தை விட கருப்பு வெள்ளை படமாக இருந்தால் எவ்வளவு அழகாக இருக்கும் எனத்தோன்றும். அவ்வாறு நாம் கலர் புகைப்படத்தை கருப்புவெள்ளை படமாக மாற்ற நினைத்தாலும் அந்த புகைப்படத்தினை போட்டோசாப் போன்ற எதாவது ஒரு போட்டோஎடிட்டிங்  மென்பொருளின் உதவியுடன் மட்டுமே செய்ய முடியும். அவ்வாறு இல்லாமல் நாம் நினைத்த புகைப்படத்தை ஒரு நொடியில் கருப்புவெள்ளை புகைப்படமாக மாற்றினால் எவ்வளவு அருமையாக இருக்கும். அப்படிப்பட்ட மென்பொருள் தான் Black And White Photo Maker.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள் இந்த மென்பொருளானது ப்ரீவேர் மென்பொருளாகும். இந்த மென்பொருளை ஒப்பன் செய்து எந்த புகைப்படத்தை கருப்புவெள்ளை புகைப்படமாக மாற்ற நினைக்கிறீர்களோ அதை தேர்வு செய்யவும் பின் அளவு (Size) யை தேர்வு செய்யவும். பின் உங்களுக்கு எந்த பார்மெட்டில் புகைப்படம் வேண்டுமோ அதை தேர்வு செய்யவும், நீங்கள் குறிப்பிடும் இடத்தில் புகைப்படமானது சேமிக்கப்படும்.

சிறப்புகள்:
  • எந்த அளவில் வேண்டுமானலும் புகைப்படத்தை மாற்றிக்கொள்ள முடியும்.
  • Clipboard-களையும் இந்த மென்பொருளானது சப்போர்ட் செய்யக்கூடியது ஆகும்.
  • இந்த மென்பொருளானது JPEG, BMP, GIF, PNG, TGA, ICO மற்றும் பல இமேஜ் பைல் பார்மெட்டுகளை சப்போர்ட் செய்யக்கூடியது ஆகும்.
  • வேண்டிய அளவில் புகைப்படத்தை தேர்வு செய்து கருப்புவெள்ளை புகைப்படமாக மாற்றிக்கொள்ள முடியும்.

கணிப்பொறியை முழுவதுமாக பேக்அப் எடுக்க Paragon Drive Backup 9.0.....



நம்முடைய கணிப்பொறியானது வைரஸ் தாக்குதலுக்கு ஆளாக நேரும், அது போன்ற நிலையில் வைரஸ்யை நீக்க முடியாமல் போகும் இதனால் நம்முடைய கணினியானது செயல் இழக்க நேரிடும் அதுபோன்ற நிலையில் நம்முடைய கணினியில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை இன்ஸ்டால் செய்ய நேரிடும் அந்த நிலையில் நம்முடைய வன்தட்டில் உள்ள தகவல்களை பேக்அப் எடுக்க வேண்டிய நிலை ஏற்படும். அதுபோன்ற நிலையில் நாம் நமக்கு வேண்டிய பைல்களை தனியே தேர்வு செய்து சிடி/டிவீடி அல்லது ப்ளாஷ் ட்ரைவ்களில் பேக்அப் செய்து கொள்வோம். அவ்வாறு இல்லாமல் வன்தட்டில் குறிப்பிட்ட பார்ட்டிசியனை மட்டும் தேர்வு செய்து அதை மட்டும் பேக்அப் செய்து கொள்ள முடியும் வேண்டுமெனில் ரீஸ்டோரும் செய்து கொள்ள முடியும்.


மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி நிறுவிக்கொள்ளவும், நிறுவும்போது கீ கேட்டும் அப்போது முந்தைய அப்ஷனை தேர்வு செய்து GetProductkey என்னும் ஆப்ஷனை தேர்வு செய்து ரிஜிஸ்டர் செய்தபின் உங்களுக்கான கீயானது உங்களுடைய ஈமெயிலுக்கு அனுப்பி வைக்கப்படும், பின் நீங்கள் முழுமையாக இந்த மென்பொருளை உங்களுடைய கணினியில் நிறுவிக்கொள்ள முடியும்.

மேலும் இந்த மென்பொருளின் உதவியுடன் பார்ட்டிசியனை பார்மெட் மற்றும் டெலிட் செய்து கொள்ளவும் முடியும். வேண்டுமெனில் பார்ட்டிசியன்களை மறைத்து வைத்து கொள்ளவும் முடியும். இந்த மென்பொருளானது NTFS (v1.2, v3.0, v3.1), FAT16, FAT32, Linux Ext2FS, Linux Ext3FS, Linux Swap, HPFS ஆகிய பைல் சிஸ்ட்டங்களை சப்போர்ட் செய்யும். 

விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டமான Xp,Vista,7 போன்றவற்றை ஆதரிக்க கூடியது ஆகும். பேக்அப் செய்ய கூடிய டேட்டாவினை ப்ளாஷ் ட்ரைவில் தொடங்கி சிடி/டிவிடிக்களில் பதிவு செய்துகொள்ள முடியும். இந்த மென்பொருள் USB 2.0 வினை சப்போர்ட் செய்யக்கூடிய வகையில் உள்ளது என்பது கூடுதல் சிறப்பம்சம் ஆகும்.

டேட்டாவினை பேக்அப் செய்ய முதலில் Backup என்னும் பட்டியை தேர்வு செய்து Next பொத்தானை அழுத்தவும், பின் எந்த ட்ரைவ் என்பதை தேர்வு செய்யவும், பின் டேட்டாவினை எந்த ட்ரைவில் பதிய வேண்டுமோ அதனை தேர்வு செய்யவும், அடுத்ததாக Finish என்ற பட்டனை அழுத்தவும். கடைசியாக Apply பட்டனை அழுத்தவும். தற்போது பேக்அப் ப்ராசஸ் நடைபெறும் , சிறிது நேரத்தில் முற்றுபெறும். பின் நீங்கள் பேக்அப் செய்த டேட்டாவினை தனியே சேமித்து வைத்துக்கொள்ள முடியும். இதே போல்தான் ரீஸ்டோரும் செய்ய வேண்டும்

Saturday, May 14, 2011

Your Computer - Male Or Female ? - Check It Now

To find out the gender of your computer follow these instructions :


* Open Notepad.
* Type or copy-paste: CreateObject("SAPI.SpVoice").Speak"I love you"
* Save as computer_gender.vbs
* Run the file.




If you hear a male voice, you have a boy;

If you hear a female voice, you have a girl.

Your Computer - Male Or Female ? - Check It Now

To find out the gender of your computer follow these instructions :


* Open Notepad.
* Type or copy-paste: CreateObject("SAPI.SpVoice").Speak"I love you"
* Save as computer_gender.vbs
* Run the file.




If you hear a male voice, you have a boy;

If you hear a female voice, you have a girl.

Make your IE go as fast as Firefox ............


1. click start > run
2. type regedit > enter
3. browse folder HKEY_CURRENT_USER\Software\m*cro$oft\Windows\CurrentVersion\InternetSettings
4. right click @ windows right > New > DWORD
5. type MaxConnectionsPerServer > u can set value (the more higher the no, the more good speed u get, eg : 99)
6. create another DWORD >type MaxConnectionsPer1_0Server
7. then put a high value as mentioned above
8. then, restart IE ... ur finished.

Friday, May 13, 2011

நீங்கள் புதிதாக ப்ரவுஸ் செய்கிறீர்களா ?


இன்டர்நெட் வெப்சைட் குறித்த செய்திகள் மற்றும் ஆய்வுகள் குறித்த தகவல்களைத் தருகிறது. குறிப்பாக வெப் 2.0 குறித்த அண்மைக் காலத்திய செய்திகள் ஏராளம்.

பல வாசகர்கள் கம்ப்யூட்டர் குறித்த பல விஷயங்களுக்கான வெப்சைட்டுகளில் முக்கியமான பாதுகாப்பான இணைய தளங்கள் குறித்த தகவல்களைக் கேட்டு எழுதி வருகின்றனர். அவர்களுக்கான குறிப்புகள் இங்கே தரப்படுகின்றன. கம்ப்யூட்டர் மட்டுமின்றி வேறு சில பயனுள்ள பொருள் குறித்தும் தளங்கள் தரப்பட்டுள்ளன.



1. www.downloadsquad.com : இந்த தளம் சாப்ட்வேர் மற்றும் வெப் புரோகிராம்களில் அவ்வப்போது ஏற்படும் மாற்றங்கள் குறித்து இந்த தளத்தில் தகவல்கள் அப்டேட் செய்யப்படும். மிகவும் பயனுள்ள தகவல்களைத் தருவதுடன் வேடிக்கையாகவும் சில சமயம் செய்திகளைத் தரும்.


2. www.gmailtips.com : கூகுள் மெயில்பயன்படுத்துபவர்களுக்கான தகவல் களஞ்சியம். அதிகமான எண்ணிக்கையில் குறிப்புகள்,டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ் தரப்பட்டுள்ளன. இதனை நடத்துபவர் இன்னொரு தளத்தையும் நடத்துகிறார். அதன் முகவரி www.jimsltips.com . இதில் இமெயில் தகவல்களுடன் மொபைல் குறித்த தகவல்கள் மற்றும் டிப்ஸ்கள் உள்ளன.


3. www.thegreenbutton.com : விண்டோஸ் மீடியா சென்டர் எடிஷன்குறித்த அனைத்து தகவல்களுக்கும் இந்த கிரீன் பட்டன் தளம் உதவிடும். லேட்டஸ் அப்டேட் பைல்களைத் தருவதோடு டவுண்லோட் செய்திட சில புரோகிராம்களையும் தருகிறது.



4. www.stopbadware.org : இது பக்கத்துவீட்டு காவல்காரன் போல செயல்படுகிறது. ஏதேனும் மோசமான விளைவுகளைத் தருவதற்கென்றே உருவாக்கப்படும் தளங்கள் குறித்த தகவல்களைத் தருகிறது. இது போன்ற தளங்களால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து வரும் தகவல்களைத் திரட்டி அவற்றின் அடிப்படையில் மோசமான தளங்கள் மற்றும் புரோகிராம்களின் பட்டியலை அளிக்கிறது.

5. www.techcrunch.com : இன்டர்நெட் வெப்சைட் குறித்த செய்திகள் மற்றும் ஆய்வுகள் குறித்த தகவல்களைத் தருகிறது. குறிப்பாக வெப்2.0 குறித்த அண்மைக் காலத்திய செய்திகள் ஏராளம்.


6. www.techdirt.com தொழில் நுட்ப உலகின் தில்லுமுல்லுகள் மற்றும் முக்கிய செய்திகள், ஆய்வு முடிவுகள் ஆகியவை குறித்து சுருக்கமான தகவல்களைத் தருகிறது.



சில வேடிக்கையான துணுக்கு செய்திகளும் உண்டு. நீங்களும் உங்களுக்குத் தெரிந்த செய்திகளையும் தகவல்களையும் அனுப்பலாம்.


7. www.tweakguides.com உங்கள் சிஸ்டத்தை ட்யூன் செய்து அதன் திறனை அதிகப்படுத்த வேண்டுமா? இதுதான் நீங்கள் செல்ல வேண்டிய தளம். விளையாட்டுகள், பிரவுசர்கள், டிரைவர்கள் என அனைத்தையும் இந்த தளம் மூலம் மேம்படுத்தி கம்ப்யூட்டர் இயக்கத்தை புதுப்பிக்கலாம்.


8.www.ilounge.com இதனுடைய பெயர் தெரிவிப்பது போல இது ஐ–பாட் மற்றும் ஐ–ட்யூன் ஆகியன குறித்த தகவல்களைத் தரும் தளம். இந்த இரண்டு குறித்து உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் இங்கு கிடைக்கும். எப்படி பயன்படுத்துவது என்ற டுடோரியல் தகவல்கள் மிகவும் பயனுள்ளன. இந்த இரண்டைப் பொறுத்தவரை இந்த தளத்தை ஒரு கடல் எனலாம். இதில் ஐ–பாட் 2.2 வழிகாட்டி இபுக்காக உள்ளது. இதில் 202 பக்க தகவல்கள் ஐ – பாட் குறித்து உள்ளன.


9. www.photonhead. com டிஜிட்டல் கேமரா வாங்கிவிட்டீர்களா? அபெர்ச்சர், ஸ்பீட், ரெட் ஐ எனப் பல விஷயங்கள் உங்களைக் குழப்புகிறதா? உடனே இந்த தளத்திற்குச் செல்லுங்கள். இங்கு குழந்தைக்குச் சொல்லிக் கொடுப்பது போன்ற பல டுடோரியல்கள் உள்ளன. சிமுலேட்டர் முறையில் ஒரு கேமரா ஆன்லைனிலேயே தரப்பட்டு எப்படி இயக்குவது என்பதைச் சொல்லிக் கொடுக்கிறது. ஆனால் கொஞ்சம் பழமையானது போல சில விஷயங்கள் இருக்கின்றன. எனவே அப்படி எண்ணுபவர்கள் www.slrgear.com என்ற தளத்திற்குச் செல்லலாம்.


10. www.crazymeds.org : மனநிலை குறையுடையவர்களுக்கான தளம் இது. இங்கு இவ்வகையில் மருந்து உட்கொள்பவர்கள், சிகிச்சை எடுப்பவர்கள் தங்களது அனுபவத்தினைத் தருகின்றனர். சும்மா தகவலுக்காக இதனைப் பார்க்கலாம்.


11.www.goaskalice.com அமெரிக்க கொலம்பியா பல்கலைக் கழகம் நடத்தும் மெடிக்கல் இணைய தளம். சிலர் கேட்க கூச்சப்படும் கேள்விகளைத் தாங்கள் யாரென்று காட்டிக் கொள்ளாமல் இங்கு கேள்விகளை இடலாம். சரியான முறையான பதில் கிடைக்கும்.


12. www.quotedb.com சிலர் எப்போது பேசினாலும் இது அவர் சொன்னது இவர் சொன்னது என்று பிரபலங்கள் கூறியதைச் சொல்வார்கள். சிலர் பொதுமேடைகளில் பேசச் செல்கையிலும் சில ஆசிரியர்கள் வகுப்புகளில் பாடம் நடத்துகையிலும் அவர்களுக்குச் சில கொட்டேஷன்கள் கட்டாயம் வேண்டியதிருக்கும். அவர்களுக்கான தளம் இது. 60 வகை பொருள்களில் ஏறத்தாழ 4,000 புகழ் பெற்ற கொட்டேஷன்கள் உள்ளன.


13. www.thefreedictionary.com ஆன் லைனில் உள்ள அருமையான டிக்ஷனரி. ஒரு சொல்லுக்குப் பொதுவான பொருள் மட்டுமின்றி, மருத்துவம், சட்டம், கம்ப்யூட்டர், நிதிச் சந்தை தொடர்பான பொருளும் தரப்படும். இவற்றுடன் ஒத்த பொருள் தரும் சொற்கள். எதிர்ப்பதங்கள், பழமொழிகள், வழக்குச் சொற்களும் இந்த தளத்தில் கிடைக்கின்றன. இவற்றுடன் பல உதிரி பிரிவுகளும் இருக்கின்றன. இவற்றில் நியூஸ் அலர்ட், வார்த்தை விளையாட்டு எனப் பிரிவுகளும் உள்ளன.


14. www.webmath.com ஒரு பெயிண்டர் ஒரு அறையை எட்டு மணி நேரத்திலும் இன்னொருவர் 10 மணி நேரத்திலும் வெள்ளை அடித்தால் இருவரும் சேர்ந்து எவ்வளவு நேரத்தில் வெள்ளை அடிப்பார்கள்? என்ன – இதெல்லாம் ஸ்கூலில் முடித்து வந்தாச்சே ! இப்போ எதுக்கு என்கிறீர்களா? இதைப் போன்ற கணக்குகள் மற்றும் அல்ஜிப்ரா, கால்குலஸ் எனப் பல பாடப்பிரிவுகளுக்குத் தீர்வுகளை இந்த தளம் தருகிறது.


15. www.worldwidewords.org ஆங்கிலச் சொற்கள் குறித்து தெரிந்து கொள்ள அருமையான ஓர் தளம். ஒரு சொல்லை எடுத்துக் கொண்டு அதன் பல பரிமாணங்களை இந்த தளம் எடுத்துச் சொல்கிறது.


எடுத்துக் காட்டாக எப்போதாவது ஒரு முறை என்ற பொருளில் “blue moon” என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக மது அருந்துபவர்கள் பிடிபட்டால் இந்த சொல்லைப் பயன்படுத்துவார்கள். ஆனால் இது மேலும் சில பொருளையும் தரும். ஒரே மாதத்தில் இரண்டு பௌர்ணமி வருவதையும் இந்த சொல் மூலமே குறிக்கலாம். இது போல பல விளக்கங்கள்; பல எடுத்துக் காட்டுகள். உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிந்து வைத்தால் வாரம் ஒரு முறை அல்லது மாதம் ஒரு முறை சொற்கள் பயன்பாடு குறித்த இமெயில் செய்தி உங்களுக்கு அனுப்பப்படும்.


மேற்குறித்த தளங்கள் அனைத்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட தளங்களில் சில. இது போல பயனுள்ள தளங்களை வாசகர்கள் காண நேர்ந்தால் அவை குறித்து எங்களுக்குத் தகவல் அனுப்பலாம்.

அமெரிக்க கொலம்பியா பல்கலைக் கழகம் நடத்தும் மெடிக்கல் இணைய தளம். சிலர் கேட்க கூச்சப்படும் கேள்விகளைத் தாங்கள் யாரென்று காட்டிக் கொள்ளாமல் இங்கு கேள்விகளை இடலாம். சரியான முறையான பதில் கிடைக்கும்

Sunday, May 8, 2011

டெண்டுல்கர் - இப்பவாவது இவர இந்த உலகம் நம்புமா?


சச்சின் டெண்டுல்கர் - Probably இந்தியாவில் அதிகம் நேசிக்கப்பட்ட அதே சமயம் அதிகம் குறை கூறப்பட்ட பெயர்.

இன்னுமா இவன இந்த உலகம் நம்புதுங்கற ரேஞ்சில இருக்குற பல பேர நமக்குத் தெரியும், ஆனால் இன்னுமா இவரது திறமையில் சந்தேகம், இன்னுமா இவர இந்த உலகம் நம்பலன்னு சொல்லக்கூடிய வெகுசிலரில் சச்சினும் ஒருவர்.



இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இவரது Match Saving Century க்கு அப்புறமாவது டெண்டுல்கருக்கு எதிரான விமர்சனங்களை நிறுத்துவார்களா? எத்தனையோ Match Winning Innings ஆடியிருந்தாலும் இந்த இன்னிங்க்ஸும் மிக முக்கியமான ஒன்று.
லோஷனின் எதிர்பார்ப்பை தவிடு பொடியாக்கிய சச்சின் Critics இன் கூற்றையும் தவறென நிரூபித்திருக்கிறார். இனிமேலாவது சச்சின் முக்கியமான தருணங்களில் ரன் எடுப்பதில்லை / தனக்காக ஆடுகிறார், டீமுக்காக ஆடுவதில்லைன்னு சொல்றதையெல்லாம் நிறுத்துவார்களா பெரியவர்கள்??

சச்சினின் சாதனைகள் மிக அதிகம், எல்லாருக்கும் தெரிந்த விஷயங்களை மீண்டும் சொல்லி போர் அடிக்க விரும்பவில்லை, இதை மட்டும் பாருங்கள்
30,055 இண்டர்நேஷனல் ரன்கள், 88 சதங்கள், 144 அரை சதங்கள், டெஸ்ட் ஆவரேஜ் 54.79, ODI average 44.50 at a strike rate of 85.79. இதற்கு மேலும் ஒரு குழு ஆட்டத்தில் தனி நபரிடம் என்னதான் இந்த பாழப்போன விமர்சகர்கள் எதிர்பார்க்கிறார்கள் எனத் தெரியவில்லை.

நவ்ஜோத் சித்து சொன்னது போல - Statistics is like mini skirt, it reveals most of the things but not the most import thing. சச்சின் எண்களில மட்டுமல்லாமல் Attitude / Commitment போன்றவற்றிலும் மிக உயர்ந்து நிற்கும் ஒரு மனிதர். ஆஸ்திரேலியாவிற்கு
எதிரான ஷார்ஜா ஆட்டங்கள், தந்தை இறந்து சில நாட்களிலேயே விளையாடச் சென்றது, சிட்னி சென்சுரி இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்.

ஐந்தரை அடி கூட உயரம் இல்லாத ஒரு இந்தியர் இப்படி விஸ்வரூபம் எடுத்திருப்பதை நினைத்து பெருமை படுங்கள், குறை சொல்வதை நிறுத்துங்கள்..

AB, this lil prick is going to make more runs than you one day... ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் மெர்வ் ஹூக்ஸ் ஆலன் பார்டரிடம் சச்சின் பத்தி சொன்னது - அவர் வாயில் சர்க்கரையை தூக்கி கொட்ட - அன்றே என்ன ஒரு நிதர்சனம்...

தொலைபேசி எப்படி ஒட்டு கேட்கப்படுகிறது?


இந்திய அரசியலை தற்போது மையம் கொண்டு தாக்கி வரும் புயல் ஒட்டு கேட்கப்பட்ட நீரா ராடியாவின் தொலைபேசி பேச்சுகள். இதனால் வெளிவரும் பல அரசியல் தகிடு தத்தங்கள். நான் அரசியல் தெரியாத ஒரு அப்பாவி:((( ஆனால் இந்த தொலைபேசி ஒட்டு கேட்கும் தொழில் நுட்பம் பற்றி நன்றாக தெரியும். பல தொலை பேசி/செல்பேசி நிறுவனங்களுக்கு இந்த ஒட்டு கேட்கும் தொழில் நுட்ப கட்டமைப்பை வடிவமைத்து கொடுத்திருக்கிறேன். தொலைபேசி ஒட்டு கேட்கும் தொழில் நுட்பம் பற்றிய சிறிய விளக்கம்.


Lawful Interception (LI) என்பது நாட்டிலுள்ள சந்தேக நபர்களின் தொலைபேசி பேச்சுகளை ஒட்டு கேட்பதற்காக ITU (International Telecommunication Union - http://www.itu.int ) மற்றும் ANSI (American National Standards Institute - http://www.ansi.org ) போன்ற நியம அமைப்புகளால் ஏற்படுத்தப்பட்ட தகவல் பறிமாற்ற வரையறை.

இதன்படி ஒவ்வொரு தொலைபேசி/செல்பேசி நிறுவனத்தின் கட்டமைப்பிலுள்ள தொலைபேசியை எப்படி ஒட்டு கேட்க வேண்டும் அதற்கான தேவையான கட்டமைப்பு தொழில்நுட்பம் எப்படி இருக்க வேண்டும் என்று வரையறுக்கப் பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப் படும் தொழில்நுட்பம் என்பதால் மிகக் கடுமையான பலத்த பாதுகாப்பு வரையறைகள் இந்த தொழில்நுட்பத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

நாம் தொலைபேசி வழியாக பேசும் பேச்சுகள் தொலைபேசி கட்டமைப்பிலுள்ள பல விசைமாற்றிகள் (Switches) வழியாக கன நேரத்தில் கடத்தி செல்லப்படுகின்றன.

விசைமாற்றியில் ஒரு கொக்கி போட்டு பேசுபவர்கள் இருவருக்கும் தெரியாத வகையில் விசைமாற்றி அவர்கள் பேசுவதை அப்படியே ஒரு காப்பி எடுத்து CBI, RAW  போன்ற உளவுத்துறை நிறுவனத்திலிருக்கும் LEMF (Law Enforcement Monitoring Facility) என்றழைக்கப்டும் ஒட்டு கேட்கும் நிலையங்களுகு அனுப்பி வைத்து விடும்.

சற்று விரிவாக பார்க்கலாம்...


உளவுத்துறை ஒருவரை சந்தேகத்திற்குரிய நபர் என்று அடையாளம் கண்டு கொண்டவுடன் அவ்ருடைய தொலைபேசியை ஒட்டுகேட்க வேண்டும் என்ற வாரண்டை உளவுத்துறை அதிகாரி LEMF செண்டரில் உள்ள கம்யூட்டரில் பதிவு செய்வார்.

                [கீழ்க்கண்ட தகவல்களுக்கு இந்த படத்தை ரெபர் செய்யவும்]

உடனே அந்த தகவல் அந்த சந்தேக நபரின் தொலைபேசி நிறுவனதிலுள்ள IMC (Interception Management Centre) எனப்படும் கம்யூட்ருக்கு HI-1 (Hand Over Interface-1) என்ற தகவல் பாதை வழியாக வந்து சேரும். அதை நிர்வாகம் செய்யும் அதிகாரி யார்? ஏன்? என்ற எந்த கேள்வியும் கேட்காமல் உடனே அந்த தொலைபேசி எண்ணை ஒட்டு கேட்க IMC-யில் பதிவு செய்து விடுவார்.

இந்த IMC-யை ஆபரேட் செய்வதற்கு பலத்த பாதுகாப்பு வரையறைகள் உள்ளன. அவ்வளவு சுலபமாக இதை யாரும் ஹேக் செய்ய முடியாது. IMC கம்யூட்டரை நிர்வகிக்க ITU மற்றும் ANSI நியமனப்படி தேவையான பாதுகாப்பு விதிமுறைகளை தொலைபேசி நிறுவணம் பின்பற்றா விட்டால் அதன் லைசன்ஸ் ரத்து செய்யப் பட்டு விடும். இது தெரியாமல்தான் நீரா ராடியா தன்னுடைய நிறுவனமான டாடா நிறுவன செல்பேசி வழியே பேசினால் யாரும் ஒட்டு கேட்க மாட்டார்கள் என்ற தப்புக் கணக்கு போட்டு “வல்லவனுக்கு வல்லவன்இந்த உலகத்தில் உண்டு என்ற உண்மையை உணராமல் மாட்டிக் கொண்டார்:( ஒரு சில முறை தப்பு செய்து மாட்டிக்கொள்ளவில்லை என்றால் நாம் செய்யும் தப்பை யாராலும் கண்டு கொள்ள முடியாது என்ற அகம்பாவம் மனிதனுக்கு வந்து விடுகிறது. எனவே தொடர்ந்து தப்புகளை செய்கிறான். ஆனால்... “பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட்டு கொள்வான்இதுதான் உண்மை. Law of Average!

சந்தேக நபர் கால் செய்யும்போதோ அல்லது அவருக்கு கால் வரும்போதோ அந்த தொலைபேசி எண் ஒரு சந்தேகப் பேர்வழியின் எண் என்று விசைமாற்றி (Switch)-க்கு தெரிந்து விடும். உடனே அவர் யாருக்கு போன் செய்கிறார் அல்லது யாரிடமிருந்து போன் வருகிறது என்ற தகவல்களை HI-2 (Hand Over Interface-2) என்ற தகவல் பாதை வழியாக உளவுத்துறை நிறுவனத்திலுள்ள LEMF-செண்டருக்கு அனுப்பி விடும். உடனே... பழைய படத்தில் வில்லன் நம்பியார், பி.ஸ்.வீரப்பா அவர்கள் உட்கார்ந்திருக்கும் இடத்தில் சிவப்பு கலர் பல்பில் லைட் எரிவது போல் LEMF செண்டரில் உட்கார்ந்திருக்கும் உளவுத்துறை அதிகாரியின் மேசையில் சிவப்பு கலர் அலராம் அடிக்க ஆரம்பித்து விடும். அவர் ஒரு ஹெட்போனை மாட்டிக்கொண்டு ரெடியாக உட்கார்ந்து விடுவார்.
 இப்போது இருவரின் தொலைபேச்சுகளை விசைமாற்றி கொக்கி போட்டு அப்படியே LEMF செண்டருக்கு HI-3 (Hand Over Interface-3) என்ற தகவல் பாதை வழியாக அனுப்பி வைத்து விடும்.
இந்த பேச்சுகள் LEMF செண்டரிலுள்ள ஹார்டு டிஸ்க்கில் MP-3 பைலாக சேமிக்க படும். ஆனால்.. நம் ஊடகங்கள் (Media) டேப் என்று சொல்லி ஏதோ டேப்பில்தான் ரெக்கார்ட் செய்யப்ப்டுகிறது என்று நம் காதில் பூ சுற்றிக் கொண்டுள்ளார்கள்:) இந்த காலத்தில் யார் டேப் பயன்படுத்துகிறார்கள்? டேப்பில் பதிவு செய்தல் ஒரு காயலான் கடை தொழில்நுட்பம்:)))

தேவைப்ப்ட்டால் இந்த பேச்சுகளை CBI, RAW, Economic Enforcement, State Police போன்ற பல உளவுத்துறை நிறுவனங்களுக்கும் ஒரே நேரத்தில் அந்தந்த உளவுத்துறை நிறுவனத்திலுள்ள LEMF செண்டருக்கு அனுப்பி வைக்க முடியும். எனவே சந்தேக நபர் பேசுவதை பல உளவுத்துறை நிறுவனங்கள் ஒரே சமயத்தில் கண்காணிக்க முடியும்.

தொலைபேசி பேச்சுகள் மட்டுமன்றி சந்தேக நபர்களின் மின்னஞ்சல் (E-mail), மின் அரட்டை (Chat) போன்றவைகளையும் இதே தொழில் நுட்ப அடிப்படையில் ஒட்டு கேட்கலாம்.

போனில் பேசும்போது பார்த்து சூதனமா பேசுங்க... சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்ளாதீர்கள்:)))

Wednesday, May 4, 2011

Trace Mobile numbers


Recently I came accross a website in which we can easily trace a Mobile number. For example , when we enter the 10 digit mobile number, then we get the Mobile Service provider, Location, City along with area. Thats really awesome. 

This tool will be really helpful specially for business persons to verify the location etc...
The site link is www. indiatrace.com




Some Greatly Usefull Websites!!!!

Test your typing skills, how fast do you type ?

Do you get the broadband speed that you pay for ? find out here :

Get automatically updated when a website gets updated
for HD WALLPAPER lovers......


http://dizorb.com/
FREE Website


I would like to tell you about free web hosting service I use now.
Register here: http://www.000webhost.com/445112.html

http://www.w3schools.com
Its an online web tutorial site which provides contents on HTML,XML,BROWSER SCRIPTING,SERVER SCRIPTING and WEB BUILDING
 

bored.com
http://www.bored.com/
 



http://www.41q.com/
Personality test — get to know your personality type in 41 Questions

http://www.sketchswap.com/
This website exhorts you to draw, sketch or doodle something on the screen. After you are done, click on the submit button and you will receive a random drawing from someone else. All the sketchs are approved the people who run the site, so the sketch you get in return are safe for kids.

great site
This one of my personal favourite ones!!

 

Monday, May 2, 2011

எம்.எஸ்.வர்டில் டைப் செய்யாமலேயே டெக்ஸ்டை நுளைப்பதற்கு


1 எம்.எஸ்.வர்டில் டெக்ஸ்ட் போமட்டிங் பற்றி உங்கள் நண்பருக்குக் கற்றுக் கொடுக்க நினைக்கிறீர்கள். அதற்கு டைப் செய்த ஒரு பந்தி உங்களுக்கு அவசியம். ஆனால் டைப் செய்வதற்கு அதிக நேரம் எடுக்கும. நீங்கள் சொல்வது போல் ஏற்கனவே டைப் செய்து சேமித்து வைத்துள்ள ஒரு பைலைத் திறந்தும் தேவையான டெக்ஸ்டைப் பெற்றுக் கொள்ள்லாம். எனினும் அதனை விட இலகுவாக டெக்ஸ்டைப் பெற எம்.எஸ்.வர்டில் ஒரு வழியுள்ளது. இதன் மூலம் டெக்ஸ்டை டைப் செய்யாமலேயே பக்கம் முழுவதும் நிரப்பிக் கொள்ள்லாம். அதற்குப் பின்வரும் வழி முறையைக் கையாளுங்கள்.
எம்.எஸ்.வர்ட்டைத் திறந்து புதிய ஆவணமொன்றில் =rand() என டைப் செய்து எண்டர் விசையைத் தட்டுங்கள். அடுத்த வினாடியே ஒரு பந்தி டெக்ஸ்ட் தோன்றக் காணலாம். இந்த வசதி எம்..எஸ்.வர்ட் 2007 மற்றும் அதற்கு முந்திய பதிப்புகளிலும் கிடைக்கிறது. எனினும் 2007 பதிப்ப்பில் தோன்றும் டெக்ஸ்ட் 2003 மற்றும் அதற்கு முந்திய பதிப்பிலிருந்து மாறுபட்டது.
இன்னும் சற்று மாறுதலாக =rand(5) என டைப் செய்யுங்கள். அதே போன்ற டெக்ஸ்ட் ஐந்து பந்திகளில் தோன்றச் செய்யலாம். =rand(10,5) என டைப் செய்ய ஐந்து வரிகள் கொண்ட பத்து பந்திகள் தோன்றக் காணலாம்.