Friday, July 22, 2011

கணினியை பயன்படுத்தும் அனைவருக்கும், கணினியை பற்றி முழுமையாக தெரிந்திடாது. ஒரு சிலருக்கு தன்னுடைய கணினியில் என்னென்ன ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர்கள் இருக்கின்றன என்று தெரியாது. ஒரு சில நேரங்களில் தன்னுடைய நண்பர்கள் அவர்களுடைய கணினியை பற்றி கேட்பார்கள் அப்போதுதான் அவசரம் அவசரமாக தன்னுடைய கணினியில் என்னென்ன ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர்கள் இருக்கின்றன என்று ஆராய்ந்து பார்ப்போம். இவற்றை நாம் தெளிவாகவும் காண முடியாது. விவரங்கள் அனைத்தும் ஒரே இடத்திலும் கிடைக்காது. இதுபோன்ற சிக்கல்களை தீர்க்கவும், கணினியை பற்றிய முழுவிவரங்களையும் அறிய ஒரு இலவச மென்பொருள் உதவி செய்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த மென்பொருளை ஒப்பன் செய்யவும். இதில் தனித்தனி பகுதிகள் உள்ளன. அதன்படி கணினியில் என்னென்ன ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர்கள் உள்ளன என்பதை மிகவும் தெளிவாக காண முடியும். மிகவும் துல்லியமாக கணினியின் விவரங்களை காண முடியும்.

Thursday, July 21, 2011

கணினியை பற்றி துல்லியமாக முழுவிவரங்களை அறிய ...

கணினியை பயன்படுத்தும் அனைவருக்கும், கணினியை பற்றி முழுமையாக தெரிந்திடாது. ஒரு சிலருக்கு தன்னுடைய கணினியில் என்னென்ன ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர்கள் இருக்கின்றன என்று தெரியாது. ஒரு சில நேரங்களில் தன்னுடைய நண்பர்கள் அவர்களுடைய கணினியை பற்றி கேட்பார்கள் அப்போதுதான் அவசரம் அவசரமாக தன்னுடைய கணினியில் என்னென்ன ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர்கள் இருக்கின்றன என்று ஆராய்ந்து பார்ப்போம். இவற்றை நாம் தெளிவாகவும் காண முடியாது. விவரங்கள் அனைத்தும் ஒரே இடத்திலும் கிடைக்காது. இதுபோன்ற சிக்கல்களை தீர்க்கவும், கணினியை பற்றிய முழுவிவரங்களையும் அறிய ஒரு இலவச மென்பொருள் உதவி செய்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த மென்பொருளை ஒப்பன் செய்யவும். இதில் தனித்தனி பகுதிகள் உள்ளன. அதன்படி கணினியில் என்னென்ன ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர்கள் உள்ளன என்பதை மிகவும் தெளிவாக காண முடியும். மிகவும் துல்லியமாக கணினியின் விவரங்களை காண முடியும்.

Monday, July 18, 2011

கூகுளின் மறுபெயர் புதுமை...!

 
இணையத்தில் தேடும் வசதியை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்கின்றது கூகுள். ஒரு அலைபேசியில் தொடுதிரை, கேமரா,Scanner,wifi,கூகுள் மேப்,கூகுள் சர்ச்,இமேஜ் சர்ச். கீழே பாருங்கள் இதுதான் , அடுத்த இமேஜ் சர்ச்அதாவது படம் மூலம் தகவல்களை பெறுவது...படங்களை தேடுவது அல்ல.

இக்கருவியின் மூலம் நீங்கள் ஒரு கட்டிடத்தை பார்த்தால், அடுத்த கணம்அக்கட்டத்தின் தகவல்களை உங்களுக்கு காட்டும்.என்ன மலைப்பாக இருக்கின்றதா...

அதற்கும் மேலாக அக்கட்டத்தின் ஒரு மாடியை தொடுதிரையில் நீங்கள் தொட்டால் , அதன் விவரமும் கிடைக்கும் ...


Scanner அடிப்படையாக கொண்டு இயங்குகின்றது.நீங்கள் ஒரு பூவை இதன் மூலம் பார்த்தால் அதன் மொத்த தகவலும் உடனுக்குடன் உங்களுக்கு.இதை நீங்கள் மகிழ்வுந்து ,பூச்சி,பாலம் போன்றவற்றின் தகவல் அறியவும் பயன்படுத்தலாம்.


நீங்கள் காலையில் தினசரி வாசித்து கொண்டிருக்கிறீர்கள்...அப்போது ஒரு சொல்லின் அர்த்தம் தெரியவில்லையா?கவலையை விடுங்கள்.அச்சொல்லின் ஆதி அந்தம் வரையில்
உங்களுக்கு ஒரு நொடியில்.அப்படியும் உங்களுக்குதிருப்தி இல்லையா ?நீங்கள் விக்கிபீடியா முதற்கொண்டு இணையத்திலும் அச்சொல்லை பற்றி தகவல்களை அறியலாம்.

நீங்கள் இனி தினசரியிலும் தேடலாம்...!

உங்கள் தினசரி அல்லது புத்தகங்களை , மொழிபெயர்க்கலாம் உடனடியாக...!

இதை எங்கே வேண்டுமானாலும் உபயோகிக்கலாம்...!

ஒரு பழத்தை இதன் மூலம் பார்த்தால் ...!

எனக்கு இது மெயிலாக வந்தது...என்ன ? நினைத்து பார்க்கவே
வியப்பாகவும் ,மலைப்பாகவும் உள்ளதா.கூகுள் முதன்மை இடத்தில் ஏன் இருக்கின்றது என்பது புரிகின்றது .கூகுளின் மறுபெயர் புதுமை...!...

Sunday, July 17, 2011

நீங்களே Portable மென்பொருட்களை உருவாக்கலாம் வாங்க!


எந்நேரமும் கணனியில் வேலைசெய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும், வேவ்வேறு இடங்களில் (பிற) கணனிகளில் வேலைசெய்ய வேண்டி ஏற்படும் போது நமக்கு தேவையான மென்பொருட்களை எடுத்து சென்று அக்கணனிகளில் நிறுவி வேலையை ஆரம்பிக்கும் போது காலம் கடந்துவிடும். 
அவாவாறான சந்தர்ப்பங்களில்  கையடக்கமான (Portable) மென்பொருட்களி இருந்தால் நமது வேலைகளை இலகுவாக்கிக் கொள்ளலாம்.

எங்கும் எடுத்துச் செல்ல  கூடிய Portable மென்பொருட்களை உருவாக்கலாம் வாங்க!



இதற்கு வேறாக மென்பொருட்களும் தேவையில்லை, இதற்கு தேவைப்படுவது  WIN RAR மென்பொருள் மட்டுமே.
இங்கு portable VLC player application ஒன்றை உருவாக்குவது எப்படியென பார்ப்போம்.
VLC player (ஊடக இயக்கி) ஒன்று செயற்பட தேவையான கோப்புகளை தெரிவுசெய்து கொள்ளுங்கள்.



அவற்றை WinRar archive ற்கு add செய்து கொள்ளுங்கள்.



பின் வரும் dialog box ல் உருவில் காட்டப்பட்டுள்ளவாறு அமைப்புகளை மாற்றிக்கொள்ளுங்கள்.

இப்பபொழுது Advanced எனும் பகுதியில் SFX options என்பதை தெரிவு செய்யுங்கள்.
பின் General tab இல் பிரித்தெடுத்த பின்  செயல் படுத்த வேண்டிய கோப்பின் பெயரை எழுதி OK பொத்தானை அழுத்துங்கள்.




பின்னர் Text and Icon எனும் பகுதியில் பின்வருமாறு மாற்றங்களை செய்யுங்கள்.

அதன் பின் SFX option இல் உள்ள Modes tab பை கிளிக் செய்து, 

படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு மாற்றங்களை செய்யுங்கள். அவ்வளவே தான் கையடக்க மென்பொருள் தயாரிக்கப்பட்டுவிட்டது. இதை எந்த கணனியிலும் நிறுவாமல் பயன்படுத்தலாம்.

நீங்களும் உங்களுடைய  PORTABLE மென்பொருளை உருவாக்கி விட்டீர்களா?

கணினியில் இருந்து பீப் ஒலி வருகிறதா?


  கணினி On செய்தவுடன் Bios ஆனது Booting ஆகும் நேரத்தில் ஹார்டுவேர் பாகங்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என சோதிக்கும். அப்படி ஏதாவது ஒரு சில பாகங்கள் சரியில்லை என்றால் உடனே கணினியில் இருந்து பீப் ஒலி ஒலிக்க தொடங்கும்.
http://www.howtoarchives.com/wp-content/uploads/2009/08/beeps-on-computer.jpg
அப்படி ஒலிக்கும் ஒலியின் எண்ணிக்கையை வைத்தே நாம் எதில் சிக்கல் இருக்கிறது என கண்டுபிடிக்கலாம்.......

1 , 2 , 3 , முறை- Ram அல்லது Motherboard


4 , முறை - டைமர் (Motherboard ) இனை சரி செய்யவும்


5 , முறை - ப்ராசசரில் (Procsser) சிக்கல்


6 , முறை - Key board , Key போர்டு கண்ட்ரோல் , Key போர்டு கண்ட்ரோல் ஷிப்


7 , முறை - Motherboard இல் உள்ள ஜம்பர்கள் சரியாக உள்ளாதா என பார்க்கவும்.

http://www.ngohq.com/attachments/games/2348d1258355675-beep-sounds-when-playing-games-img_1478.jpg

 மேற்குறிப்பிட்ட விடயங்களை சரிபார்ப்போமாயில் கணணி பீப் ஒலி பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளலாம்.

Pen drive வில் Write Protected எனவருகின்றதா? Remove பண்ணுவோமா?

   நீண்ட இடைவெளியின் பின்னர் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி, வலைத்தளத்திற்காக நேரம் ஒதுக்க முடியாமல் போய்விட்டது. எனினும் அக்கால இடைவெளியில் நான் முகம்கொடுத்த பிரச்சினைகளில் ஒன்று எனது பென் ட்ரைவில் Write protected என ஒரு செய்தி வந்ததே.

சில வேலைகளில் நீங்களும் இப்பிரச்சினைக்கு முகம்கொடுத்திருப்பீர்கள், Pen drive வினை வீசி புதிய Pen drive வாங்கி விட்டீர்களா? அதற்காத தீர்வுகளை உங்களுடன் பகிர்கின்றேன்.

இதற்கு முன் என் சில நண்பர்களுக்கும் இவ்வாறான பிரச்சினைகள் வந்திருக்கின்றன என்றாலும் என்னால் எதுவித தீர்வுகளையும் வழங்க முடியாமல் போய்விட்டது, அதனால் அவர்களும் தம் Pen drive வினையே வீசிவிட்டார்கள்.
முதலில் Write Protected Pen drive வினால் ஏற்படும் பிரச்சினைகளை பார்ப்போம், இவ்வாறான பென்ட்ரைவிலுள்ள கோப்புகளை நம்மால் எதுவித மாற்றங்களையும் செய்யமுடியாது, அவ்வாறு மாற்றங்களை செய்ய முற்படும் போது பின்வரும் செய்திகளை காணக்கூடியதாக இருக்கும்.
  • Cannot copy files and folders, drive is write protected
  • Cannot format the drive, drive is write protected
  • The disk is write protected
  • Remove write protection or use another disk
  • Media is write protected 
usb-drive-write-protected
இவ்வாறான பிரச்சினைகள் pen drive களில் மடடுமன்றி memory card மற்றும் iPod போன்ற USB portable devices களிலும் தோன்றலாம். இதனால் உங்கள் பென்ட்ரைவினை format செய்யகூட முடியாத நிலை ஏற்படும். இது பலருக்கு தலையிடியாக கூட இருந்திருக்கலாம்.

http://img.ehowcdn.co.uk/article-page-main/ehow-uk/images/a07/tq/oh/fix-drive-thats-write-protected-800x800.jpghttp://www.thelifedigital.com/wp-content/uploads/2009/03/viruspenflashdrive.jpg
இதற்கு சில Virus கள் மற்றும் முறையற்ற ரீதியில் கணனியிலிருந்து Safety remove  USB செய்யாமையே காரணங்களாக குறிப்பிடலாம். 
தீர்வு : -
இதற்கு பல்வேறு தீர்வுகள் இருந்தாலும் மிகச்சிறந்த தீர்வினை உங்களுடன் பகிர்கின்றேன்.
01. இங்கு தரப்பட்டுள்ள மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள், தரவிறக்கச் சுட்டி
பின்னர் உங்கள் Pen drive வினை கணணியுடன் இணைத்து தரவிறக்கிய மென்பொருளை டபல் கிளிக் செய்யுங்கள், உங்கள் பென் ட்ரைவ் Format ஆக தொடங்கும். Format ஆகி முடிந்தவுடன் Pen drive வினை Safety remove செய்து மீண்டும் கணனியில் பொருத்துங்கள்,
சில நேரங்களில் உங்கள்  Pen drive வின் Write protected இப்போதே நீக்கப்பட்டிருக்கும். 
அவ்வாறு இல்லையெனின் அதாவது இன்னும் Write protected என காட்டப்பட்டிருப்பின், கீழுள்ள படிமுறைகளை செயற்படுத்துங்கள்.

02. Start --->> Run, கிளிக் செய்து regedit என டைப்செய்து Enter பொத்தானை அழுத்துங்கள், பின்  registry editor திறக்கும். அதில்

HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\StorageDevicePolicies
 write-protection-registry
செல்லுங்கள், அங்கு StorageDevicePolicies என இல்லாவிடின் இங்கு தரப்பட்டுள்ள சுட்டியை கிளிக் செய்து add.bat  பின் டபல் click செய்யுங்கள். இப்போது registry editor இல் Storage Device Policies இடப்பட்டுவிடும். 
பின் WriteProtect எனும் Key யினை Double Click செய்து படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு Value Data எனும் பகுதியில் 0 (பூச்சியம்) என டைப் செய்து  OK பொத்தானை அழுத்துங்கள்.


பின்னர்  Registry யை மூடி விட்டு , கணணியை restart செய்யுங்கள். மீண்டும் உங்கள் பென் ட்ரைவினை கணனியில் பொறுத்துங்கள், அவ்வளவே தான்...

இன்னும் உங்கள் Pen drive வில் Write Protected என செய்தி வருகின்றதா? உங்கள் கருத்துகளை பகிருங்கள்.

Saturday, July 9, 2011

All- in -One Software ஐ இலவசமாக பெற.................

All- in -One  என்று பொதுவாக ஒன்றிலே பல தொழிற்பாடுகளை செய்யக்கூடிய இலத்திரனியற் சாதனங்களைத்தானே கேள்விப்பட்டோம். இதென்னவென்று கூட யோசிக்கலாம்.
ஆம். பொதுவாக கணனியில் இயங்குதளத்தை நிறுவியபின்னர் எமக்கு தேவைப்படுவது மென்பொருட்கள் அடங்கிய சிடியே. இதனை நாம் கடையிலிருந்தோ அல்லது நண்பர்களிடமிருந்தோ அல்லது அடிக்கடி இயங்குதளத்தை நிறுவுபவர்கள் எனின் சேகரித்தோ கூட வைத்திருக்கலாம். ஆனால் உங்களிடம் அவ்வாறு மென்பொருட்கள் ஏதும் போதியளவு இல்லாதவேளை இயங்குதளத்தை அழித்து மீண்டும் நிறுவவேண்டி ஏற்படும் சந்தர்ப்பத்தில் CD க்காக அலையவேண்டியதில்லை.


உங்கள் தேவையை நிறைவு செய்ய ஒரு தளம் உள்ளது. இவ் இணையத்தளத்தில் எமக்குத் தேவையான அடிப்படையான மென்பொருட்கள் அனைத்தும் உள்ளது. அங்கு நீங்கள் சென்று எந்தெந்த மென்பொருட்கள் தேவையோ அவற்றை தெரிவு செய்யவேண்டியதுதான்.
தெரிவு செய்தபின்னர் கீழே உள்ள 'Get Installer' என்ற பட்டனை கிளிக் செய்து நீங்கள் தேர்ந்தெடுத்தவற்றை நிறுவும் மென்பொருளை[All- in -One Software]  தரவிறக்கி கொள்ளுங்கள்.

இப்போது தரவிறக்கிக் கொண்ட அந்த மென்பொருளை இயக்கினால் நீங்கள் தேர்ந்தெடுத்த அனைத்து மென்பொருள்களும் தானாக தரவிறக்க பட்டு உங்களிடம் எவ்வித கேள்வியும் கேட்காமல் கணினியில் நிறுவப்பட்டு விடும்.
வீட்டில் இருந்தவாறே உங்கள் தேவையை ஒரே இணையத்தளத்திலிருந்து ஒரு மென்பொருளை தரவிரக்குவதன் மூலம் பல மென்பொருட்களை நிறுவிக் கொள்ளலாம். 


இதற்கான தரவிறக்கச் சுட்டி: