- மேலே உள்ள படத்தில் பார்த்தாலே புரிந்திருக்கும் இந்த வசதியை பற்றி நமக்கு வந்துள்ள ஈமெயில்கள் ஒரு பகுதியாகும் அதை க்ளிக் செய்தால் ஓபன் ஆகும் ஈமெயில் Preview ஒரு பகுதியாகும் அடுத்த பகுதியில் People Widget தெரியும்.
ஆக்டிவேட் செய்ய
- இந்த லிங்கில் க்ளிக் Gmail Labs செய்யுங்கள் இந்த லிங்க் உங்கள் ஜிமெயில் Labs பகுதிக்கு அழைத்து செல்லும்.
- அதில் உள்ள Preview pane வசதிக்கு அருகில் உள்ள Enable பட்டனை க்ளிக் செய்து கீழே உள்ள Save Changes என்பதை க்ளிக் செய்து விடவும்.
- இப்பொழுது அந்த ஜிமெயில் பக்கத்தை Refresh செய்யுங்கள். கீழே படத்தில் காட்டியுள்ளது போல ஒரு பட்டன் காணப்படும் அதை க்ளிக் செய்யவும்.
- இதன் மீது க்ளிக் செய்தால் போதும் ஜிமெயிலின் புதிய வசதியை நீங்களும் பெறலாம்.
- இனி ஒவ்வொரு மெயிலாக ஓபன் செய்து பார்க்காமல் ஒரே பக்கத்தில் அனைத்து மெயில்களையும் ஓபன் செய்து படிக்கலாம்.
- இதில் மேலும் சில வசதிகள் உள்ளது No Spilit, Vertical Split, Horizontal Split என்பதாகும்.
No Split - புதிய வசதி தேவையில்லை எனில் இதை க்ளிக் செய்தால் பழைய ஸ்டைலில் ஜிமெயில் மாறிவிடும்.
Vertical Split - நீங்கள் இந்த வசதியை ஆக்டிவேட் செய்தால் டீபால்டாக இந்த ஸ்டைலில் தான் இயங்கும்.
Horizontal Split - ஜிமெயில் ஸ்டைல் குறுக்காக பிரிக்கப்படும்.
மற்றும் இந்த Preview மூலம் பார்க்கும் ஈமெயில்களை கட்டுபடுத்த சில வசதிகளையும் வழங்கி உள்ளார்கள்.
- Settings- General - Preview pane சென்றால் டீபால்டாக After 3 seconds என்று இருக்கும் அதாவது நாம் Preview-ல் ஏதேனும் மெயிலை பார்த்தால் 3 நொடிகளுக்கு பிறகு அந்த மெயில் படிக்கப்பட்ட ஈமெயிலாக மாறிவிடும்.
- அதில் நேர அளவை மாற்றவேண்டுமானால் இதில் சென்று மாற்றி கொள்ளலாம்.





No comments:
Post a Comment